Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

சூப்பர்ஸ்டாரை நெகிழ வைத்த மயில்சாமி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்த காமெடி நடிகர் மயில்சாமி பிறருக்கு செய்த உதவிகள் ஏராளம்.

தமிழ் சினிமா நடிகர்களுக்கு மட்டுமல்ல மற்ற மாநில நடிகர்களையும் இப்படியெல்லாம் மயில்சாமி உபசரித்து வந்துள்ளர். இதுபற்றி ஒரு தகவலை பகிர்ந்து இயக்குனர் பி.வாசு ‘கன்னட சூப்பர்ஸ்டார் விஷ்ணுவர்தனை வைத்து ‘ஆப்தரக்‌ஷகா’ எனும் திரைப்படத்தை இயக்கி கொண்டிருந்தேன். அப்படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடந்தது. ‘அப்போது திண்டுக்கல் பிரியாணி என பலரும் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு அந்த பிரியாணி கிடைக்குமா?’என விஷ்ணுவர்தன் கேட்டார் என்னிடம் கேட்டார்.

நாம், “ திண்டுக்கல் செல்ல தேவையில்லை. இங்கேயே அது வரும்” என அவரிடம் சொன்னேன். “எப்படி?” என கேட்டார். அதற்கு, “ஒரு நடிகர் இருக்கிறார்” எனக்கூறி மயில்சாமியை அழைத்து, “எனக்கு திண்டுக்கல் பிரியாணி வேண்டும்” என அவரிடம் கேட்டேன்.

யாரையோ பிடித்து கொஞ்சநேரத்தில் அனுப்பி வைத்துவிட்டார். அந்த பிரியாணி விஷ்ணுவர்தனுக்கு பிடித்து போக அந்த நடிகரிடம் நான் பேச வேண்டும் என்றார். நான் மயில்சாமியை செல்போனியில் அழைத்து ஒரு நடிகர் உன்னிடம் பேச வேண்டும் என சொன்னேன். அவருக்கு விஷ்ணுவர்தன் என தெரியாது.

மயில்சாமியிடம் பேசிய விஷ்ணுவர்தன் தன்னை யார் என சொல்லிவிட்டு ‘ என்னா சாப்பாடு மயில்.. ரொம்ப பிரமாதமாக இருந்தது’ என அவரை பாராட்ட மயில்சாமி மகிழ்ச்சியில் திளைத்து போய்விட்டார்’ என பிவாசு கூ

- Advertisement -

Read more

Local News