Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

போர் தொழில் டு மாவீரன்.. ஆகஸ்ட் மாத  ஓடிடி படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முன்பெல்லாம் புதிய படம் வந்தால் 3 மாதங்களுக்குப் பிறகு தான் தொலைக்காட்சிகளில் வெளியிடுவர். ஆனால், ஓடிடி வந்த உடன் 4 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாகி விடுகிறது. இதனால் ஒரு மாதம் கழித்து புதிய படங்களை வீட்டிலோ டிவியிலோ அல்லது ஸ்மார்ட் போனிலோ பார்த்துக் கொள்ளலாம் என ஆகிவிட்ட து.

இந்த ஆகஸ்ட் மாதம் ஓடிடிகளில் வெளியாக காத்திருக்கும் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையிலான படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

போர்த்தொழில்: அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியான போர்த் தொழில் படம் தியேட்டரிலேயே 75 நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 4ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் போர்த்தொழில் ரிலீஸ் ஆகிறது.

தி ஹன்ட் ஃபார் வீரப்பன்: அதே ஆகஸ்ட் 4ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் The Hunt for Veerappan எனும் டாக்குமென்ட் சீரிஸ் வெளியாகிறது. இதனை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பன் பற்றிய ஆவணப் படம் என்பதால், இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேட் இன் ஹெவன் சீசன் 2: பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து அசத்திய சோபிதா துலிபாலா தொடர்ந்து ஏகப்பட்ட ஓடிடி வெப்சீரிஸ்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான நைட் மேனேஜர் சீசன் 2 ஓடிடி ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்த நிலையில், அடுத்ததாக மேட் இன் ஹெவன் சீசன் 2 மூலம் மீண்டும் ரசிகர்களை குஷிப்படுத்த காத்திருக்கிறார் சோபிதா துலிபாலா. அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி இந்த தொடர் வெளியாகிறது.

மாவீரன்: சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற படம் மாவீரன். இது ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமேசான் பிரைம் வெளியிடவில்லை.

- Advertisement -

Read more

Local News