ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகச் சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்பட்டு குழுவில் இணைக்கப்படுகின்றனர். அந்த வகையில், 2023-ஆம் அண்டுக்கான புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் உள்ள 398 கலைஞர்களைத் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து 13 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அதில் இயக்குநர் மணிரத்னம், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், கரண் ஜோகர், சித்தார்த் ராய் கபூர், கீரவாணி உள்ளிட்ட பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு ஆஸ்கர் அகாடமி குழுவில் சூர்யா, கஜோல் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் இணைந்தனர். ஆஸ்கர் அகாடமி குழுவில் 10,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.