Thursday, April 11, 2024

எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். .அவரது மகன் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போதும் படங்களை இயக்கி வரும் நிலையில், ஒரு வழக்கில் அவருடைய வீட்டில் இருக்கும் பொருட்களை ஜப்தி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2011-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் சட்டப்படி குற்றம்’. இந்தப் படத்திற்கு செய்த விளம்பர செலவு 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்காததை அடுத்து, விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன், சென்னை அல்லிகுளம் 25-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் S.A.சந்திரசேகர் மீது வழக்கு தொடர்ந்தார்.

சட்டப்படி குற்றம்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்த சந்திரசேகருடன் தான் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், அந்த ஒப்பந்தப்படி செய்த வேலைக்கான கட்டணத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வழங்கவில்லை. அந்தப் பணத்தை வசூலித்து தர வேண்டும்…” என அந்த மனுவில் சரவணன் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பணத்தை செலுத்த உத்தரவிட்டது. ஆனாலும் அந்தப் பணத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வழங்காததால் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தக் கோரி சரவணன் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சொந்தமாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருக்கும் ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் நீதிமன்ற பணியாளர்கள், பொருட்களை ஜப்தி செய்ய சென்றபோது, சந்திரசேகரின் அலுவலக பணியாளர்கள் ஜப்தி செய்யவிடவில்லையாம். “இதனால் ஜப்தி நடவடிக்கையின்போது தங்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்..” என்று கோரி மீண்டும் சரவணன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News