Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

ரகுமான் கடற்படை வீரராக நடித்திருக்கும் ‘ஆபரேஷன் அரபைமா’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முன்னாள் கடற்படை வீரர் பிராஷ் இயக்கத்தில் ரகுமான் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘ஆபரேஷன் அரபைமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

‘துருவங்கள் பதினாறு’ படத்திற்குப் பின் அந்நிய எதிரிகளை வேட்டையாட தன் படையுடன் கடற் படை அதிகாரியாக வருகிறார் ரகுமான்.

ரகுமானுடன், மலையாள நடிகர் டினி டாம், பாலாஜி, நாடோடிகள்’ அபிநயா, அனுப் சந்திரன், ஷிகாத், நேகா சக்ஸேனா, அர்விந்த், சஜி, மனிஷா, ரமேஷ் ஆறுமுகம், கௌரி லஷ்மி, மேபூ உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த ஆபரேஷன் அரபைமா’ படத்திற்கு இசை – பிரம்மானந்தன், ஒளிப்பதிவு – ஃபீனிக்ஸ் உதயன். பாடல்கள் – முருகன் மந்திரம், நிர்வாகத் தயாரிப்பு – ஏழுமலை சரணவன். இணை தயாரிப்பு – ஜெயின் ஜார்ஜ். தயாரிப்பு – டைம் அண்ட் டைட் ப்ரேம்ஸ் ஸ்டுடியோஸ்.

நம் நாட்டை அந்நிய ஆபத்துகள் சூழும் நேரங்களிலும், தீயவர்கள் நம் நாட்டிற்குள் கொடுஞ்செயல்கள் செய்யும் நோக்கத்துடன் நுழையும் நேரங்களிலும், நமது இராணுவ வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து ஆபத்துகளிடம் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் நம்மைக் காக்கின்றனர். அதற்காக பல ஆபரேஷன்களை நம்நாட்டு வீரர்கள் வெற்றிகரமான செய்திருக்கின்றனர். அப்படி நடுக்கடலில் நடந்த ஒரு உண்மையான இராணுவ ஆபரேஷனை தழுவி எடுக்கப்பட்ட படம்தான், ‘ஆபரேஷன் அரபைமா’.

படத்தின் இயக்குநர் பிராஷ் முன்னாள் கடற்படை வீரர் என்பதால், கடலில் நடைபெறும் ஆபரேஷன் உண்மையான ஆபரேஷன் போல இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய உழைத்திருக்கிறார்.

கேரளா போலீஸ் கமாண்டோ படையின் துணை கண்காணிப்பாளர் அஜித்குமார் மற்றும் நேஷனல் செக்யூரிட்டி கார்டு கமான்டோ பயிற்சியாளர் கேப்டன் அனில்குமார் ஆகியோரை வரவழைத்து ஆபரேஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு, கேரளா, அந்தமான், கோவா, துபாய் உள்பட பல இடங்களில், பல கடல்களில் இப்பபடத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

தேசப் பாதுகாப்பு, கடற்படை, இராணுவ ஆபரேஷன் என எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் இந்த ஆபரேஷன் அரபைமா’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகும்.

- Advertisement -

Read more

Local News