இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ட்யூட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துக்குப் பின், கீர்த்தீஸ்வரன் தனது இயக்குனர் வாழ்க்கையை இந்த படத்தின் மூலம் தொடங்கியுள்ளார். இதில், பிரேமலு புகழ் மமிதா பைஜூ பிரதீப்பிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் முதல் சிங்கிள் ஊரும் பிளட் பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில் பிரதீப் ரங்கநாதனின் Lik திரைப்படமும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன், “இந்த இரண்டு படங்களில் ஏதாவது ஒன்று மட்டுமே தீபாவளி அன்று வெளியாகும். எது வெளியாகும் என்பது காத்திருப்பதுதான். ஆனால் இந்த தீபாவளி நம்ம தீபாவளி தான்” என தெரிவித்தார். இதனால், தீபாவளி அன்று எந்த திரைப்படம் வெளியாகும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.