1982ம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் ராதா, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான, காதல் ஓவியம் படம் பலராலும் பாராட்டப்பட்டது. நெகிழ்வான காதல் கதை அது. ஆனால் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.
இப்படத்தில் நாயகனாக கண்ணன் என்பவர் அறிமுகமானார். அவருக்கும் பாராட்டுகள் குவிந்தன.
ஆனால் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் திரைத்துறையினருக்குத் தெரியவில்லை.
இந்த நிலையில், நாற்பத்தியோரு வருடம் கழித்து அவரை டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் சித்ரா லட்சுமணன் பேட்டி கண்டு இருக்கிறார்.
கண்ணன் என்பது திரைத்துறைக்காக அவருக்கு சூட்டப்பட்ட பெயர். அவரது தாய்மொழி தமிழ் அல்ல. ஏன்.. ஒரு காலத்தில் அவரது மூதாதையர்கள் இன்னொரு நாட்டில் இருந்து வந்தவர்கள்.
அதோடு காதல் ஓவியம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது எப்படி… அப்போதே பிரபலமாக இருந்த ஹீரோயின் ராதா எப்படி பழகினார், படப்பிடிப்பு அனுபவங்கள்…
இப்படி தன்னைப்பற்றியும், காதல் ஓவியம் பட அனுபவங்கள் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை கூறியிருக்கிறார் கண்ணன்.
# அவரது முழு பேட்டியை பார்த்து ரசிக்க கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..