துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமால். இமாலய மலையில் துறவியை போல ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
2011 ஆம் ஆண்டு வெளியான சக்தி எனும் படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமனார். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாகவும் அதே ஆண்டு வெளியான அஜித்தின் பில்லா 2 படத்திலும் இவர் நடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
43 வயதாகும் வித்யுத் ஜமால் ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் இப்படி இயற்கையோடு ஒன்றி வாழ்வது என்றும் ஆடைகளை துறந்து எந்த சொகுசு வாழ்க்கையும் இல்லாமல் காட்டில் தனிமையில் வாழ ஆரம்பித்துள்ளேன் எனக்கூறி உள்ளார்.
முழு நிர்வாணமாக இமய மலையின் காடுகளில் அடுப்பை பற்ற வைத்து சமைக்கும் புகைப்படங்களையும், நதியில் இறங்கி குளிக்கும் புகைப்படங்களையும் வித்யுத் ஜமால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.