திரைப்படத்தைத் தாண்டி, நிஜத்தில் தனி இமேஜ் உள்ள நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். குறிப்பாக எளிய மக்கள், தங்கள் பிரச்சினைகளை நிஜமாகவே விஜயகாந்த் தீர்த்து வைப்பார் என அவர் நடிகராக மட்டுமே இருந்தபோதே நம்பினார்கள்.
2004ல் அவர் நாயகனாக நடித்த “நெறஞ்ச மனசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு உடுமலைப்பேட்டையில் நடந்துகொண்டு இருந்தத
படப்பிடிப்பின்போது, விஜயகாந்த்தை பார்க்கவேண்டும் என ஒரு முதிய பெண்மணி, வெகு நேரமாக கேட்டுக்கொண்டு இருந்தார். . அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.
இதை கவனித்த இயக்குனர் சமுத்திரக்கனி, விஜயகாந்த்திடம் “அண்ணே, அந்த பாட்டி உங்களை பார்க்கணும்னு ரொம்ப நேரமா போராடிக்கிட்டு இருக்காங்க ” என்று சொன்னார். உடனே, விஜயகாந்தும் அந்த பெண்மணியை அழைத்தார்.
ஓடி வந்த முதிய பெண்மணி விஜயகாந்த்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அதோடு, “ரேஷன் கடையில அரிசியை குறைச்சி குறைச்சி போடுறான். சரியாவே அளக்கிறதில்லை.. வந்து அவனை அடி” என்றாராம்.
இதைக் கேட்ட விஜயகாந்த் “அதெல்லாம் தப்பு. நான் அரசியலுக்கு வருவேன். நீ ஓட்டுப்போட்டு என்னைய ஜெயிக்க வை. அதுக்கப்புறம் வந்து அவனை தட்டிக்கேட்குறேன், சரியா” என்றாராம். அதன் பின் அந்த பெண்மணிக்கு தேவையான அரிசி பைகளை கொடுத்து அவரை அனுப்பிவைத்தாராம் விஜயகாந்த்.
“விஜயகாந்த் அரசியலுக்கு வர இந்த சம்பவமும் தூண்டுகோலாக இருந்தது” என்று வீடியோ பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் பத்திரிகையாளர் செல்வம்.