Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

“அய்யோ… புடவையா?”: உஷா உதுப்பை கிண்டலடித்த ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கொல்கத்தாவில் நடந்து வரும் விழா ஒன்றில், பிரபல பாப் பாடகி, உஷா உதுப் பேசினார். அப்போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

“1960களின் இறுதியில், கொல்கத்தா பெரிய அழகான இரவு விடுதிகளின் நகரமாக இருந்தது. இங்கே, பார்க் ஸ்ட்ரீட்டில் உள்ள டிரின்காஸ் உணவகத்தில் பாடகியாக மேடையேறினேன். பொதுவாக பாப் பாடகிகள் மேற்கத்திய உடை அணிந்திருப்பார்கள். நான், புடவை கட்டி இருந்தேன்.

என்னைப் பார்த்த ரசிகர்கள், ‘இந்தம்மா என்னத்தை பாடிவிடப் போகிறது’ என கிண்டலடித்தார்கள். ஆனால், எனது பாடலைக் கேட்ட பிறகு ரசிகை ஆகிவிட்டார்கள். அதிலிருந்து இன்று வரை புடவை கட்டிக்கொண்டுதான் பாப் பாடல்களை பாடுகிறேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News