Friday, April 12, 2024

ஜோதிகா-சூர்யா தயாரித்திருக்கும் ‘ஓ மை டாக்’ படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த ஓ மை டாக்’(oh my dog)  படம் வரும் ஏப்ரல் 21-ம் தேதியன்று அமேஸான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை 2-D எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜோடியான ஜோதிகா-சூர்யா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இணை தயாரிப்பாளர்கள் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் R.B. டாக்கீஸின் எஸ்.ஆர்.ரமேஷ் பாபு. 

இந்தப் படத்தின் முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களில் அருண் விஜய் மற்றும் அர்னவ் விஜய் (அறிமுகம்) இருவரும் நடித்துள்ளனர். 

இசையமைப்பு நிவாஸ் பிரசன்னா மற்றும் ஒளிப்பதிவினை கோபிநாத் செய்துள்ளனர். இயக்குநர் சரோவ் ஷண்முகம் எழுதி இயக்கியிருக்கிறார்.   

இப்படம் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த தாத்தா, அப்பா, மகன் மூவரின்  கதாபாத்திரங்களின் புகழ் பெற்ற உண்மையான குடும்பக் கதையாகும். 

இப்படம் ஒவ்வொரு குழந்தையும், செல்லப் பிராணியை  விரும்புபவர்களும் கண்டிப்பாகப்  பார்க்க வேண்டிய ஒன்று.

அர்ஜூன் (அர்னவ்) மற்றும் கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பாஸ இவர்கள் இருவர்பற்றிய உள்ளத்தை தொடும் கதையாகும். 

ஒவ்வொரு குழந்தையும், குடும்பமும் பார்த்து மகிழ வேண்டிய படம்.  எல்லா குடும்பங்களிலும் சாதாரணமாக நடக்கும் சம்பவங்கள், ஆசாபாசங்கள், முதல் முக்கியத்துவம், கவனிப்பு,  தைரியம், வெற்றி, ஏமாற்றங்கள், நட்பு, தியாகம், நிபந்தனையற்ற காதல் மற்றும் விஸ்வாசம் போன்ற எல்லா உணர்வுகளின் கலவையாக உள்ளது இப்படம்.

இந்தப் படம், பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 240 நாடுகளிலும், மற்றுமுள்ள பிரதேசங்களிலும் வரும் ஏப்ரல் 21-ம் தேதி வெளிவர இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News