இயக்குநர் பாண்டிராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில், “என் அம்மா சொல்லும் கதைகளைக் கேட்டுத்தான் சினிமா ஆசை ஏற்பட்டது. அந்த கனவுடன் 1996 ஆம் ஆண்டு சென்னைக்குப் புறப்பட்டு வந்தேன். என் நெருங்கிய நண்பன் அருணாச்சலம்தான் உதவினான்.
பின்னர் இயக்குநர் பாக்யராஜிடம் ஆஃபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்தேன். சின்ன சின்ன கதைகளை எழுதி பாக்யராஜிடம் காட்டுவேன். பிறகு வெற்றிக்கொடி கட்டு படத்தில் சேரனுக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். அடுத்து சிம்பு தேவன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் பணியாற்றினேன்.
பிறகு சசிகுமாரிடம் கதை சொல்லி, பசங்க படத்தை இயக்கினேன். அது சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த வசனத்திற்காக மூன்று தேசிய விருதுகளையும் வென்றது” என்றார் பாண்டிராஜ்.