Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

O2- சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுற்றுச் சூழலை மையப்படுத்தி எத்தனையோ கதைகள் படங்களாகியுள்ளது. O2 படமும் மைல்டாக சுற்றுச்சூழலைப் பேசியுள்ளது. ஆனால், அதில் ஒரு தெளிவுத்தன்மை இல்லையென்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.

நாயகி நயன்தாரா ஓர் இயற்கை ஆர்வலர். ஆக்‌சிஜன் உதவியோடு உயிர் வாழும் ஒரு மகன் அவருக்கு உண்டு. கணவன் துணையில்லாத நயன்தாரா தன் மகனுக்கு மேல் சிகிச்சை செய்ய முடிவெடுக்கிறார். அதற்காக திருப்பூரில் இருந்து கொச்சினுக்கு தன் மகனை அழைத்துக் கொண்டு செல்கிறார்.

அவர் செல்வது தனியார் பேருந்து ஒன்றில். கனமழையோடு பயணிக்கும் அப்பேருந்து ஓர் மண் சரிவில் சிக்குகிறது. பேருந்துக்குள் இன்னும் சிலரும் இருக்கிறார்கள். புதைந்து போன பேருந்துக்குள் காற்று வர வாய்ப்பற்றுப் போகிறது.

அப்போது நயன்தாரா தன் மகனுக்காக வைத்திருக்கும் சிலிண்டரை பேருந்துக்குள் இருப்பவர்கள் குறி வைக்கிறார்கள். அவர்களிடமிருந்து  தன் மகனின் மூச்சுக் காற்றை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே இந்த O2’ படத்தின் கதை

படத்தை மொத்தமாக தன் மேல் சுமப்பது நயன்தாராதான். எமோஷ்னல் காட்சிகளில் வழக்கம் போல் நன்றாக நடித்துள்ளார். ஆனாலும் அவருக்கான பின் கதை சரியாக எழுதப்படாததால் அவரின் கேரக்டரோடு ஒட்ட முடியவில்லை.

நயன்தாராவின் மகன் கேரக்டரில் நடித்துள்ள சிறுவன் ரித்விக் பரிதாபத்தை அள்ளுகிறார். க்ளைமாக்ஸ் நெருக்கத்தில் அவன் செய்யும் ஒரு காரியம் நெஞ்சைப் பதம் பார்க்கிறது.

பேருந்துக்குள் இருக்கும் ஒரு டெரர் போலீஸ் தன் நடிப்பால் மிரட்டுகிறார். குழந்தையின் சிலிண்டரை அவர் கைப்பற்றும் காட்சிகளில் எல்லாம்  பதற வைக்கிறார். மேலும் ஒரு காதல் ஜோடி, அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பா கேரக்டர், ஆடுகளம்’ முருகதாஸ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

படத்தின் டெக்னிக்கல் ஏரியாவில் கேமராமேன் தமிழ் அழகன் தன் திறமையான ஒளிப்பதிவால் கவர்கிறார். ஒற்றைப் பஸ்ஸூக்குள் நடக்கும் கதையை விதவித ஆங்கிள்கள் வைத்து விஷுவலாகப் பார்க்கும் நமக்குச் சலிப்பு ஏற்படாத வகையில் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார்.

விஷால் சந்திரசேகரின் பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு உதவி செய்துள்ளது. கூடவே திரில்லிங் காட்சிகளுக்கு கூடுதல் டெம்போவை ஏற்றியிருக்கிறார்.

படத்தின் பெரிய குறை கிராபிக்ஸ்தான். பல இடங்களில் கிராபிக்ஸ் படத்தின் தரத்தை தரை லோக்கலாக காட்டுகிறது. எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில் குவாலிட்டி குறைவு என்பது இருக்காது. ஏனோ இந்ச O2’ CG ஓட்டும்படி இருக்கிறது.

படத்தின் பலவீனமான திரைக்கதை தான் பலமான கதையை நீர்த்துப் போகச் செய்கிறது. இருந்தாலும் ஒருசில இடங்களில் பரபரப்பை ஏற்படுத்தவே செய்கிறது படம்.

கேரக்டர்களுக்கான ரைட்டிங்கிலும், நம்பகத்தன்மை நிறைந்த மேக்கிங்கும் ஒருங்கே பெற்றிருந்தால் இந்த ‘O2’ இன்னும் ஈர்த்திருக்கும்.

- Advertisement -

Read more

Local News