பிரபல இந்தி நடிகை கீர்த்தி சனோனின் சகோதரி நுபுர் சனோன். பாடகியான இவர், ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அபிஷேக் அகர்வால் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அனுபம் கெர், ரேணு தேசாய், முரளி சர்மா, ஹரீஷ் பெரேடி, ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ள
இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் நடித்தது பற்றி நுபுர் சனோன் கூறியதாவது:
ரவிதேஜாவுடன் நடித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். முதல் பட நடிகை என்று பார்க்காமல் என்னை கவனித்துக் கொண்டார்” என்றார்