டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், மறைந்த, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் குறித்து சுவாரஸ்யமான சம்பவங்களை, சித்ரா லட்சுமணன் பகிர்ந்து கொண்டார்:
“என்.எஸ்.கே. திரையுலகில் பல புதுமைகளை செய்து உள்ளார். தான் இயக்கிய மணமகள் படத்திலும் ஒரு புதுமையை செய்தார். திரைக்குப் பின்னால் பணியாற்றிய வசனகர்த்தா, இசையைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை போட்டோவுடன் விளம்பரப்படுத்தினார். தமிழ் திரையுலகில் இதுதான் முதல் தடவை.தான்,
அதே போல படத்தின் வெற்றியை கணிப்பதிலும், யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை கூறுவதிலும் கைதேர்ந்தவர்.
சென்ட்ரல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிபர்கள் ஸ்ரீராமுலு நாயுடு, நாராயண அய்யர் ஆகியோர் ஆரியமாலா என்ற படத்தை தயாரிக்க இருந்தனர். அவர்களிடம், என்.எஸ்.கே., ‘பியு சின்னப்பையா ஹீரோவா போடுங்க’ என்றார்.
அந்த நேரத்தில், சந்திரகாந்தா என்ற தோல்விப்படத்தை கொடுத்து, புதுக்கோட்டையில் முடங்கிக் கிடந்தார்., பி.யு.சின்னப்பா. ஆகவே சென்ட்ரல் பிக்சர்ஸ் அதிபர்கள் தயங்கினர்.
ஆனால் என்.எஸ்.கே. மீண்டும் வலியுறுத்தினார். அதனால் பி.யு.சின்னப்பாவை நடிக்கவைத்தனர். அந்த படம் பெரும் வெற்றி பெற்றது.
இன்னொரு ஆச்சரியமான சம்பவம், நடிகை பத்மினி சிறுமியாக இருந்தபோது, அவரது நடன அரங்கேற்றம் நடந்தது. என்.எஸ்.கே. தலைமை வகித்தார். பிறகு, “இந்த சிறுமி பெரிய நடிகையாக வருவார். அழகும், திறமையும் ஒருங்கே பெற்று இருக்கிறார்” என வாழ்த்தினார்.
என்.எஸ்.கே. இயக்கிய மணமகள் திரைப்படத்தில்தான் பத்மினி அறிமுகமானார்.
ஆனால் பத்மினியை வாழ்த்தியபோது இப்படி நடக்கும் என இருவருக்குமே தெரியாது” என்றார் சித்ரா லட்சுமணன்.
இது போன்ற சுவாரஸ்யமான திரைச் செய்திகளை அறிய டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலை பாருங்கள்..