மறைந்த நடிகர் என்.எஸ். கிருஷ்ணன், பிரபல நகைச்சுவை நடிகராக விளங்கியவர் என அனைவருக்கும் தெரியும். அதே போல, சுயமரியாதை மிக்கவர்.
அதற்கான சம்பவம் ஒன்றை, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நடிரும் பத்திரிகையாளருமான சித்ராமணி பகிர்ந்துகொண்டார்.
மறைந்த பிரபல தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி ஸ்டுடியோ தயாரித்த படம் ஒன்றில் என்.எஸ்.கிருஷ்ணன் ஒப்பந்தமானார். படப்பிடிப்புக்காக ஜெமினி ஸ்டுடியோவுக்கு காரில் வந்தார். அங்க வாசலில் இருந்து சிறிது தூரத்தில் குறுக்காக சங்கிலி கட்டப்பட்டு இருந்தது.
அங்கிருந்த காவலர், “இதற்கு மேல், ஜெமினி அதிபர் வாசனின் கார் செல்லத்தான் அனுமதி. மற்றவர்கள், இங்கேயே காரை நிறுத்திவிட்டு, நடந்து செல்ல வேண்டும்” என்றார்.
இதனால் கோபமடைந்த என்.எஸ். கிருஷ்ணன், திரும்பிச் சென்றுவிட்டார்.
படப்பிடிப்பில் அவரைக் காணாமல் அனைவரும் பதறினர். பிறகுதான் விசயம் புரிந்தது. என்.எஸ். கிருஷ்ணன், “அந்த சங்கிலியை கடந்து எந்த காரும் செல்லக்கூடாது என்று பொது விதி இருந்தால் மதிக்கிறேன். ஆனால் ஓனர் கார் மட்டும் செல்லலாம் என்பது என்ன நியாயம்” என்றார்.
இதை அறிந்த வாசன், “என்.எஸ். கிருஷ்ணன் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் ஸ்டுடியோ வரை காரில் வரலாம்” என உத்தரவிட்டார்.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..