Thursday, April 11, 2024

திரையரங்கில் ஓடிக்கொண்டு இருந்த படம் நிறுத்தம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருந்த ‘நல்ல சமயம்’ என்ற மலையாளப்படம் நிறுத்தப்பட்டுள்ளது, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாளத்தில் பிரியா வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்கி பிரபலமான ஓமர் லூலு தற்போது ‘நல்ல சமயம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் இர்ஷாத் அலி, விஜீஸ், காயத்ரி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம், சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது.

இந்த நிலையில் படத்தில் போதைப்பொருளை ஊக்குவிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறவில்லை என்றும் மத்திய கலால் துறை படத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. இயக்குனர் ஓமர் லூலு மற்றும் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் நல்ல சமயம் படத்தை தியேட்டர்களில் இருந்து வாபஸ் பெறுவதாக படக்குழுவினர் அறிவித்தனர். இதையடுத்து தியேட்டர்களில் நல்ல சமயம் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. கலால் துறை நோட்டீசை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், தீர்ப்பு வந்த பிறகு படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவேன் என்றும் ஓமர் லூலு அறிவித்து இருக்கிறார்.

மத்திய கலால்துறை வழக்கு தொடுத்து, நிறுத்தப்பட்டது என்பது இதுவரை திரையுலகில் நடக்காத விசயம். ஆகவே இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

Read more

Local News