“சித்தா” படத்தின் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடித்துள்ள புதிய திரைப்படம் “வீர தீர சூரன் 2”. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில், நடிகர் விக்ரம் கிராமத்து “காளி” என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மதுரை நகரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த படத்தின் முதல் வார வசூல் ₹15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் இருப்பதால், இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், நடிகர் விக்ரம், “வீர தீர சூரன் 2” திரைப்படத்தை ரசிகர்களோடு இணைந்து பார்த்து மகிழ்ந்து படக்குழுவுடன் கொண்டாடி வருகிறார்..மேலும், “வீர தீர சூரன் 2” படம் வெளியாகி, ரசிகர்கள் உற்சாகமாக இருப்பதை தொடர்ந்து, “வீர தீர சூரன்” முதல் பாகமும் மூன்றாம் பாகமும் உருவாகும்” என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை கேட்ட ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.