டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார் தாணு. அப்போது கருணாநிதி – ரஜினி தொடர்பான ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.
“ஒரு முறை நான் கலைஞர் கருணாநிதியை சந்திக்க சென்றேன். அப்போது ரஜினியை பற்றி ஒரு விசயத்தை என்னிடம் பேசினார். ‘என்னப்பா தாணு. நான் ரஜினியை பார்த்தேன். வெள்ளை தாடி வைத்திருக்கிறார். சூப்பர் ஸ்டாராக இருக்க கூடிய ஒரு நடிகர் இப்படி இருக்கலாமா? எம்.ஜி.ஆர். தன்னுடைய கண் சுருக்கங்கள்கூட வெளியே தெரியக்கூடாது என்பதற்காக கருப்பு கண்ணாடி போட்டு மறைத்துக்கொள்வார். இவர் ஏன் இப்படி இருக்கிறார். தாடியை எடுக்க சொல்’ என்றார்.
நான் மறுநாளே ரஜினியை நேரில் சந்தித்து, ‘நீங்கள் தாடி வைத்திருப்பதை பார்த்து கலைஞர் சங்கடப்படுகிறார்’ என்று அவர் பேசியதை அப்படியே ஒப்புவித்தேன்.
அதை கேட்டதும், \அப்படியா’ என்று மட்டும் சொன்னார். வேறு எதுவும் கேட்கவில்லை.
அடுத்த சில நாட்களில் குட்லக் தியேட்டரில் ரஜினி ஒரு படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கலைஞரும் அங்கு வந்திருக்கிறார்.
அப்போது ரஜினி, ‘அய்யா.. நீங்கள் சொன்னபடி தாடியை எடுத்து விட்டேன்…. இதோ பாருங்கள்…. இதோ பாருங்கள்…’ என்றபடி தன்னுடைய இரண்டு கன்னங்களையும் தடவி காட்டி இருக்கிறார். கலைஞரும் சிரித்தபடி அவரை தட்டி கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.
மறுநாள் கலைஞர் என்னை அழைத்தார். நானும் கோபாலபுரத்திற்கு சென்றேன். வீட்டிற்கு சென்றதும், ‘என்னப்பா தாணு ரஜினி இப்படி குழந்தை மாதிரி இருக்கிறார்., தாடி எடுத்துவிட்டு குழந்தை மாதிரி கன்னத்தை தடவி தடவி காட்டுனாறய்யா. ரொம்ப ரொம்ப இளகிய மனசு அவருக்கு’ என்று சொல்லி கலைஞரும் நெகிழ்ந்தார்.
இந்த பேட்டியை முழுமையாக பார்க்கவும், மேலும் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறியவும் கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்