Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

நோ அரசியல்.. இனிமே நடிப்புதான்!:நமீதா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கவர்ச்சி ஹீரோயினாக வலம் வந்த நமீதா, கடந்த  2017-ல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க, அவர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். திரையுலகை விட்டு ஒதுங்கினார்.

அதே நேரம், தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் இருந்தபோது அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேறவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரமும் செய்தார். நடிகை நமீதா கட்சிப்பணிகளில் காட்டிய சுறுசுறுப்பு காரணமாக அவருக்கு தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் வழங்கப்பட்டது.

இந்த சூழலில்தான், கவர்ச்சி உடையில் போடோஷூட் நடத்திய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது. மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காகவே தன்னை புகைப்படம் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஒரு வீடியோ பேட்டியில் பேசிய பத்திரிகையாளர் ராமதாஸ், “கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்த நமீதாவை, அதன் பிறகு பாஜக நிகழ்ச்சிகளில் காணமுடிவில்லை.  தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம், 5 மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரை உட்பட பாஜக நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.

டிஜிட்டலில் சொந்த தயாரிப்பில் சில நிகழ்ச்சிகளை தயாரிக்க தொடங்கினார்.  அது தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில்தான் தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார். அதாவது இனி அரசியல் இல்லை.. சினிமாதான் என்று தனது எண்ணத்தை இந்த கவர்ச்சிப் படங்கள் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்” என்றார்.

- Advertisement -

Read more

Local News