Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

என்னை மாதிரி யாரும் படிக்க முடியாது: ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தில், தூள், கில்லி, குருவி, வேட்டைக்காரன், தடம்,யானை  உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், கோபிநாத்.

தனது பள்ளி நாட்கள் குறித்து பகிர்ந்துகொண்ட இவர், “பள்ளியில் நன்றாகவே படிப்பேன்.  ஒரு முறை தேர்வு முடிந்ததும் ஆசிரியர் என்னிடம் வந்து ஆச்சரியத்துடன், “70% கேள்விகளுக்கு மட்டும் விடை எழுதி 65% மதிப்பெண்கள் பெற்று இருக்கிறாய். வேண்டுமென்றே பல கேள்விகளுக்கு விடை எழுதாமல் விட்டுவிட்டாய் என தெரிகிறது. ஏன்” என்றார்.

அதற்கு நான்,”அதிக மார்க் வாங்கினால், என்னை பி.ஈ. படிக்கச் சொல்லிவிடுவார் என் தந்தை. எனக்கோ திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆகவேண்டும் என்பதே லட்சியம். அதனால்தான் விடை தெரிந்தாலும் எழுதவில்லை” என்றேன்.

ஆசிரியருக்கு ஆச்சரியத்துடன் கோபமும் வந்தது.

ஆனால் நான் ஒளிப்பதிவாளராகி, பல படங்களில் பணியாற்றிய பிறகு அவரது கோபம் தணிந்தது. “உனக்கான துறையைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறாய்” என பாராட்டினார்” என்றார் கோபிநாத்.

விடை தெரிந்தும் பதில் அளிக்காமல் இருந்தது.. தரமான சம்பவம்தான்..

- Advertisement -

Read more

Local News