Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“விருது படம் வேண்டாம்!”:  ப்ரியாமணி அதிரடி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2003ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘இவரே அட்டகாடு’  படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் ப்ரியாமணி. 2004-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.  தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்தார்.

இந்த நிலையில்,  2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்தி வீரன் நடித்தார். இந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.
இந்த நிலையில் முஸ்தப்பா ராஜ் என்பவரை 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு சில ஆண்டுகள் ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த அவர், படங்களில் நடிக்காமல் இருந்தார்.

மீண்டும் திரையுலகுக்கு வந்துள்ள அவர் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர், “கமர்சியல் படங்களியே நடிக்க விரும்புகிறேன். ஆர்ட் படம்.. விருதுக்கான படம்.. போன்றவற்றில் நடிக்க விரும்பவில்லை” என அதிரடியாக தெரிவித்து உள்ளார்.

 

- Advertisement -

Read more

Local News