இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”.
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் படம் இது. சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கி வருகிறார்.
கதாநாயகன் பிரஜன் கதாநாயகி மனிஷா யாதவ் புது நாயகி சினாமிகா ஆகியோர் நடித்து உள்ளனர். மேலும், முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. சிம்பு நடித்த “மாநாடு” உள்ளிட்ட படங்களை தயாரித்த பட அதிபர் சுரேஷ் காமாட்சி போஸ்டரை தனதுடுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
கதாநாயகி மனிஷா யாதவ் கூறும்போது, “படிக்கிற வயதில் பாடங்களை சரிவர படிக்காமல், காதலில் சிக்கி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர். இது குறித்த படம் இது. இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக இந்த படம் இருக்கும்” என்றார்.
இந்த படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். முனிகிருஷ்ணன் கலை அமைக்க சண்டை காட்சிகளை பிரதீப் தினேஷ் அமைக்க, நடன காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் வடிவமைத்திருக்கின்றனர். தயாரிப்பு நிர்வாகம் இளங்கோ.