கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பனியன், லுங்கி அணிந்த நபர் ஒருவர் கோப்பையில் இருந்து தேநீர் ஊற்றுவது போல் ஒரு கேலிச் சித்திரம் ஒன்றை பகிர்ந்திருந்தார். கூடவே “நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த கருத்தால் நெட்டிசன்கள் சிலர் கொந்தளித்தனர்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மலையாளி டீ கடைக்காரருக்கு என்ன நடந்தது என இன்னுமே நகைச்சுவையை புரிந்துகொள்ளாமல் கேட்கும் ட்ரோலர்களே…
அவர் உங்களைப் போல அல்ல. அவர் மிகவும் புத்திசாலி. அவர் தனது கிளைகளை செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு விரிவுபடுத்தியுள்ளார். புளூட்டோவிலும் விரைவில் கடையை திறக்க உள்ளார். உங்களால் முடிந்தால் அவரை பிடித்துகொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தப் பதிவில் சர்ச்சையான முந்தைய கேலிசித்திரத்தையே மீண்டும் பகிர்ந்துள்ளார்.