விஜய் நடித்துள்ள வாரிசு படம், வரும் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது. இந்நிலையில் அவரது அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் சில தகவல்களைக் கூறியிருக்கிறார்.
அவர், “தளபதி 67, ஒரு யுனிவர்சல் கதை. விஜய்க்கு இது முதல் பான் இண்டியா படம். அதற்கேற்ற வகையில் நடிகர்கள் தேர்வு இருக்கும்.
காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் படப்பிடிப்பு செய்ய இருக்கிறோம்” என்று தெரிவித்து உள்ளார்.