கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் அறிமுக வீடியோ நவ.6 வெளியானது. அதில் அவரது கதாபாத்திர பெயர் சாதிய அடையாளத்துடன் இருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் கமல்ஹாசன், ஜெயம்ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ள நிலையில், அறிமுக வீடியோவை படக்குழு நவ.6 வெளியிட்டது.
இந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன,’என் பேரு ரங்க ராயர் சக்திவேல் நாயக்கன்.
காயல்பட்டினக்காரன்” என தொடங்குகிறார். ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் மாரிசெல்வராஜ் பேச்சுக்குப் பின் கமலின் ‘தேவர் மகன்’ படம் விவாதத்தை கிளப்பியது. கமலின் சாதிய பெயர் தொடர்பான பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் சாதிய அடையாளத்துடன் புதிய படத்தில் கமல் நடிக்க இருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.