நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், விஜய் நடித்த பீஸ்ட் என நட்சத்திரங்களின் படங்களை இயக்கியவர் நெல்சன்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “கோலமாவு கோகிலா படத்துக்கு முன்பு.. அதாவது பன்னிரண்டு வருடத்துக்கு முன்பே.. நான் இயக்குநராக ஆகியிருக்க வேண்டும். நெருங்கிப் போகும் நேரத்தில் அது கை நழுவிப் போய்விட்டது. அதன் பிறகு பல்வேறு ஏமாற்றங்கள்.
பிறகுதான் புரிந்தது.. திரைத்துறையில் இந்த வெள்ளிக்கிழமை ஹீரோவா இருப்பவர் அடுத்த வெள்ளிக்கிழமை அப்படியே தொடர்வாரா என்பது நிச்சயமில்லை.
ஆகவே எனது படம் ஹிட் ஆனாலும் ப்ளாப் ஆனாலும் கவலைப்பட மாட்டேன். ஒவ்வொரு படத்தையும் அக்கறையுடன் உழைத்து உருவாக்குவேன். அதுதான் நம் வேலை. வெற்றி தோல்வி என்பது நம்மை மீறியது” என்றார்.