Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

பிரியங்கா சோப்ரா அணிந்த நெக்லஸ் ரூ.204 கோடி?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்.

இந்த நிலையில் நியூயார்க் நகரில் நடந்த மிகப்பெரிய பேஷன் ஷோ நிகழ்ச்சியான மெட் காலாவில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த வைர நெக்லசும், ஆடையும் பலரையும் கவர்ந்தது. குறிப்பாக அவர் அணிந்து வந்த நெக்லஸ் பற்றியே பலரும் பேசினார்கள். இது பல்கேரியாவை சேர்ந்த 11.6 கேரட் டைமண்ட் நெக்லஸ் வகை என்று கூறப்படுகிறது.

இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.204 கோடி என்றும் தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

 

- Advertisement -

Read more

Local News