Touring Talkies
100% Cinema

Monday, August 4, 2025

Touring Talkies

“பாவம் செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்…!”:  நவ்யா நாயர் சொல்ல வருவது என்ன?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேரளாவில் சுங்கத் துறை கூடுதல் ஆணையராக பணியாற்றியவர் சச்சின் சாவந்த். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக  இவரை சிபிஐ கைது செய்தது.  இது குறித்த குற்றப்பத்திரிகையில் நடிகை நவ்யா நாயருக்கு அவர் தங்க நகைகளைப் பரிசாக வழங்கியதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், நவ்யா நாயரை 10 முறை சந்தித்தாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நவ்யா நாயர், “சச்சின் சாவந்த் எங்கள் வீட்டுக்கு அருகே வசித்தபோது பழக்கம் ஏற்பட்டது. சச்சின் தனது பிறந்தநாளின் போது என் குழந்தைகளுக்கு சில தங்க நகைகளைப் பரிசளித்தார். அவர் குருவாயூர் கோயிலுக்குச் செல்ல நான் ஏற்பாடு செய்தேன். இதைத் தாண்டி எங்களுக்கு இடையே வேறு எந்த உறவும் இல்லை. இதை அமலாக்கத் துறையிடமும் தெரிவித்துள்ளேன்”  என்று நவ்யா நாயர் விளக்கம்அளித்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவரை பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதையடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடனமாடும் வீடியோவை பதிவிட்டுள்ள அவர், ‘உங்களில் பாவம் செய்யாதவர்கள் முதல் கல்லை எறியட்டும்’ என்ற ஹேஷ்டேக்கை இணைத்துள்ளார்.

இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News