Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் ஆடிய பிரபு தேவா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’.  இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ படலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.

இதையடுத்து படக்குழுவினருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு பிரபலங்கள் பலர் ரீல்ஸ் செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் பிரபு தேவா நடன கலைஞர்களுடன் இணைந்து இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

- Advertisement -

Read more

Local News