Friday, April 12, 2024

நட்ராஜ் – பூனம் பஜ்வா நடித்திருக்கும் ‘குரு மூர்த்தி’ திரைப்படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரண்ட்ஸ் டாக்கீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவசலபதி, சாய் சரவணன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குரு மூர்த்தி’.

இந்தப் படத்தில் நடராஜ்(எ) நட்டி நாயகனாகவும், பூனம் பஜ்வா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும், ராம்கி, மனோபாலா, ரவி மரியா, மொட்டை’ ராஜேந்திரன். அஸ்மிதா, சஞ்சனா சிங், ரிஷா ஜேகப்,ரேகா சுரேஷ், சம்யுக்தா, மோகன் வைத்யா, யோகிராம், பாய்ஸ் ராஜன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – தேவராஜ், இசை – சத்ய தேவ் உதய சங்கர், பாடல்கள் – மகுவி, வெள்ளத்துரை, கீர்த்தி வாசன், படத் தொகுப்பு – S.N. பாசில், கலை இயக்கம் – தாகூர், நடன இயக்கம் – ராதிகா, சண்டை இயக்கம் – பயர் கார்த்திக், புகைப்படங்கள் – மதன், மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல், வசனம் – கீர்த்தி வாசன், தயாரிப்பு -சிவசலபதி, சாய் சரவணன், கதை, திரைக்கதை, இயக்கம் – கே.பி.தனசேகர்.

இந்தப் படத்தை பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கியிருக்கிறார்.

ஜெய் பீம்’ படத்தின் மூலம் சர்ச்சைக்கு உள்ளான ‘குரு மூர்த்தி’ என்ற பெயர் இந்தப் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

கடமைத் தவறாத போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. அதனால் அவரது பணியில் பலவித பிரச்சினைகள் ஏற்பட்டு அது அவரது குடும்பத்திலும் தொற்றுகிறது. இதை எப்படி அந்தப் போலீஸ் அதிகாரி சமாளித்தார்…? அந்தச் சோதனைகளைத் தாண்டி வெற்றி பெற்றாரா? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் படமாக இது உருவாகியிருக்கிறது.

ஜனவரியில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடும் முடிவடைந்திருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீலகிரி, பாண்டிச்சேரி, கேரளாவைச் சேர்ந்த புத்தேரி போன்ற பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளில் நடந்து முடிவடைந்திருக்கிறது.

வரும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடுவதற்கா, படத்தின் இறுதிக்கட்ட  வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News