வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சூரி. இந்த படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு நடித்த காட்சி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பரோட்டா சூரியாக சினிமாவிலும் ரசிகர்களுக்கும் பிரபலமானார்.
பெரிய நடிகர்களுடன் நகைச்சுவை நாயகனாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறார்.
சமீபத்தில் யூடியூப் சேனலில் பேசிய சூரி என் தாத்தா பெயர் தான் எனக்கு. அதனால் அம்மா என்னை பெயர் சொல்லி அழைக்க மாட்டார் சாமி என்று தான் கூப்பிடுவார். தாத்தா பெயரை பிடிக்காத நான் சூர்யா என மாற்றிக்கொண்டேன். அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்னை திட்டி விட்டார்.
சென்னைக்கு வந்த பிறகு அம்மா வைத்த பெயரும்,நான் வைத்த சூர்யா என்ற பெயர் காலபோக்கில் மாறி சூரி ஆனது. சினிமாவில் இந்த பெயர் தான் நிலைத்து நிற்கிறது,எனது அடையாளத்தை எல்லாம் சூரி என மாற்றி விட்டேன் என்றார்.