பொன்னியின் செல்வன்’ நடிகையான சோபிதா துலிபலா உடன் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார் நாக சைதன்யா. திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த நாக சைதன்யாவின் முதல் படமே 100 கோடி வசூலைத் தந்ததில் இருவருமே மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதனால், ஜாலியாக டூர் சென்றுள்ளனர். இருவரும் நெதர்லாந்து நாட்டிற்குச் சென்றுள்ளனர். ‘தண்டேல்’ படத்திற்காக நாக சைதன்யா ஊர் ஊராகச் சுற்றி நிறைய புரமோஷன் செய்தார். அதனால் ஓய்வெடுக்கவே மனைவியுடன் டூர் சென்றுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.’தண்டேல்’ பெற்ற வெற்றியால் அடுத்த படத்தையும் அது போலவே கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம் நாக சைதன்யா.
