Saturday, July 27, 2024

‘நாட்டு.. நாட்டு’: பாடல் உருவான பின்னணி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது, ஆர் ஆர் ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டுப் பாடல். ஆம்.. இந்த பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
இசை மட்டுமல்ல.. பாடலுக்கான நடனமும் பிரமிக்க வைத்தது. ஜூனியர் என்.டி.ஆரும், ராம் சரனும் ஒரு காலில் போடும் ஆட்டம் பிரமிக்க வைத்தது.

ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கியவர் ராஜமவுலி, இசை அமைத்தவர் கீரவாணி என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்னும் சில தொழில்நுட்ப கலைஞர்களை தெரிந்துகொள்வோம்.
படத்தின் எடிட்டர், ஸ்ரீகர் பிரசாத்.
இவர், “இந்தப் பாட்டுல ஒரு ஸ்டோரி இருக்கு. முதல்ல ஒரு டான்ஸ்சா தான் போகும். அப்படியே, ஒரு போட்டி வந்துடும். அதுல ஒருத்தர் தியாகம் பண்ணி விட்டுக்கொடுப்பாரு.

இதெல்லாம் எடிட் பண்ணும்போது பாட்டே பத்தல. பாட்டுக் கொஞ்சம் அதிகமாக தேவைப்பட்டது. பாட்டுல ஒரு எமோஷன் தேவைப்பட்டது. அதனால கொஞ்சம் அதிகப்படுத்தி பாட்டை எடிட் பண்ணினோம்” என்கிறார்.

அதே போல டான்ஸ் ஆடி பிரமிக்க வைத்த ராம் சரணும், ஜூனியர் என்டிஆரும் “இந்த பாடலுக்கு 14 நாள் சூட்டிங் நடந்தது. காலை 8.30 மணிக்கு ஆரம்பிச்சிடுவோம். ரெண்டு பேருமே ஒரே மாதிரி வேகமா ஆட வேண்டியிருந்தது. 2 ஸ்டைலும் மிக்ஸாகி ராஜமௌலி ஸ்டைல் வரணும். பாட்டு முழுவதையும் பார்த்தா ரொம்ப பிரமிப்பான ஸ்டெப்ஸ எல்லாம் பார்க்கலாம்” என்கிறார்கள்.
பாடலை எழுதியவர் சந்திரபோஸ், “இந்த பாடலை எழுதியபோதே, இது மக்களை அதிகமாக கவரும் என நினைத்தோம். ஆனால் இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என நினைக்கவில்லை. ஆஸ்கர் கிடைத்தது ஆனந்த அதிர்ச்சி!” என்கிறார்.

- Advertisement -

Read more

Local News