Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“என் காதல் தோல்வி!”: சத்யராஜ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிறு சிறு வேடங்களில் தோன்றி வில்லனாக முகம் காட்டி, தமிழ்த்திரையுலகில் முக்கிய நாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சத்யராஜ்.  இப்போதும் முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் கலக்குகிறார்.

சமீபத்தில் இவர் தனது காதல் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

அவர், “நான் காலேஜ் படிச்சிக்கிட்டு இருந்த சமயம். ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு பெண்ணை நட்பு, அது இதுன்னு சொல்லி, ஒரு வழியா சினிமாவுக்கு அழைச்சுட்டுப்போனேன். என்னால நம்பவே முடியல. அப்படியே பிராக்கெட் போடலாம்னு ஆரம்பிச்சேன். ‘இதே பாரு.. எனக்கு ஒரு அத்த மக இருக்கா.. நல்ல வசதி.. அழகு. எனக்குத்தான் அவளை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ரெண்டு பேர் வீட்லயும் விரும்புறாங்க. அவளுக்கும் என் மேல ஒரு இது.. ஆனா என் மனசு உன்னைத்தான் தேடுது..’ அப்படினு பெரிய பீலா விட்டேன்.

அவ, ‘அய்யய்யோ.. நான் உங்களை லவ் பண்றேன்’னு பதறியடிச்சு சொல்லுவான்னு எதிர்பார்த்தேன். அவகிட்டேருந்து பதிலே இல்லை..  சினிமாவிலேயே கவனமா இருந்தா. அப்புறம் எங்க காதல் கைகூடுறது.. நட்பாவே பிரிஞ்சுட்டோம்” என தனது காதல் தோல்வி கதையைச் சொல்லி முடித்தார் சத்யராஜ்.

- Advertisement -

Read more

Local News