இசைஞானி இளையராஜா ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளுக்கும் இசையமைத்து ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர்.
அவரிடம் ஒரு பேட்டியில், ” நிறைய நடிகர் – நடிகைகளை சந்தித்திருப்பீர்கள். அதில் நடிகைகளில் உங்களுக்கு பிடித்த நடிகை யார்” என்று கேட்கப்பட்டது.
“எனக்கு, லைலாவை ரொம்ப பிடிக்கும் நான் அவரது ரசிகன்.. மஜ்னுவை விடவும் அதிகம் காதலித்தவன்” என்றார் இளையராஜா.
அதாவது ஒரிஜினல் லைலாவை குறிப்பி்ட்டுச் சொல்லி சிரிக்கவ வைத்தார் ராஜா.