Thursday, April 11, 2024

தெரிஞ்சிக்க வேண்டிய வாழ்க்கைத் தத்துவம்: காமெடியன் முத்துக்காளை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முத்துக்காளை ஒரு வீடியோ பேட்டியில், “வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. மனதைத் திருடிவிட்டாய் படத்தை இயக்கிய நாராயண மூர்த்தி சார், அதற்கு முன்பு உதவி இயக்குநராக, பிக்பாக்கெட் படத்தில் பணியாற்றினார்.  அப்போது அவரிடம் சென்று வாய்ப்பு தரும்படி தொடர்ந்து கேட்பேன்.

அந்த படத்தில் ஒரு கோர்ட் சீனில் கும்பலில் ஒரு வழக்கறிஞராக நிற்க வாய்ப்பு அளித்தார்.  என்னைப்போலவே வந்த இன்னொரு ஜூனியர் ஆர்டிஸ்ட்.. நீ எல்லாம் லாயர் வேசத்துக்கு வந்துட்டியா என விரட்டினார்.  கேமரா முன் என்னை நிற்க விடவே இல்லை. இதனால் கடைசியில் போய் நின்றேன்.

இதைப் பார்த்த நாராயண மூர்த்தி சார்,, முன்னால வந்து நில்லு என்றார். அதன் பிறகே கேமரா முன் வந்து நின்றேன்.

பிறகு படிப்படியாக வாய்ப்புகள் கிடைக்க ஓரளவு வண்டி ஓடுகிறது. ஆனால் என்னை விரட்டிய அந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் நடிகர், இன்னும் பழைய கைலி, சட்டையோடு அலைந்துகொண்டு இருக்கிறார்.

ஒரு முறை வழியில் என்னைப் பார்த்தவர், ‘பரவாயில்லையே..எப்படியே முன்னேறி வந்துட்டே’ என்றார்.

இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள்.. ஆகவே அடுத்தவரை தாழ்த்தி நடத்துவது தவறு” என்றார் முத்துக்காளை.

- Advertisement -

Read more

Local News