Friday, April 12, 2024

ஆண்ட்ரியாவுடனான காதல் முறிவு பற்றி அனிருத் சொன்னது என்ன..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்பாக இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகை ஆண்ட்ரியாவும் முத்தமிட்டுக் கொள்வதுபோல வெளியான புகைப்படங்கள் வெளியாகி தமிழ்ச் சினிமாவுலகம் பரபரப்புக்குள்ளானது.

அந்தச் சமயத்தில் அவர்கள் இருவரும் காதலித்துக் கொண்டிருந்தார்கள் என்றும் அதன் பின்பு அவர்களின் காதல் உடைந்து போனதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதுவரையிலும் ஆண்ட்ரியா இது குறித்து எதுவும் சொல்லாத நிலையில் தங்களது காதல் முறிவு குறித்து இசையமைப்பாளர் அனிருத் சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அனிருத் இது குறித்துப் பேசும்போது, “நான் ஆண்ட்ரியாவை காதலித்தபோது என் வயது 19. அவருடைய வயது 25. எங்களது இந்தக் காதல் தோல்வியில் முடிந்ததற்கான ஒரே காரணம் எங்களுக்கு இடையேயான இந்த 6 வயது வித்தியாசம்தான். என்னைவிட 6 வயது பெரிய பெண்ணாக இருந்ததனால் அவர் எனக்கு செட் ஆக மாட்டார் என்று நினைத்தேன். அதனால் நாங்கள் இருவருமே பேசி பிரேக் அப் செய்துவிட்டோம்” என்று அனிருத் கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News