பிரபல தொலைக்காட்சியில் இடம் பெறும் இசை நிகழ்ச்சி ஒன்றில் சிறுவர், சிறுமிகளும் கலந்துகொள்கின்றனர்.
இதில் ஒரு எபிஸோடில், நீலகிரியைச் சேர்ந்த புரோகிதஶ்ரீ எனும் பார்வையற்ற சிறுமி கலந்துகொண்டு, அனைவரையும் ரசிக்க வைத்தார். அந்த சிறுமியின் தைரியம், இசைத்திறமை அனைவரையும் கவர்ந்தது.
இந்நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் இசையமைப்பாளர் தமன், சிறுமி புரோகித ஶ்ரீயின் வாழ்க்கைக் கதையைக் கேட்டு உருக்கமாகி கண்ணீர் சிந்தினார். மேலும் அந்த சிறுமிக்க மீண்டும் பார்வை கிடைக்க, தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று உறுதியளித்தார். அவரின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.