1950களில் பிரபலமான இசையமைப்பாளராக விளங்கியவர் சி. ஆர். சுப்பராமன் என்கிற சி. எஸ். ராம்.
28 வயதிலேயே இறந்துவிட்டார். ஆனால் இதில் திரைத்துரையில் இருந்த 10 வருடங்களில் பல அற்புதமான பாடல்களை அளித்தார்.
கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேலை நாட்டிசை, நாட்டுப்புற இசை என்று பல இசை வகைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1940களிலேயே இலத்தீன் அமெரிக்க இசையை தமிழ்த் திரையிசைகளில் புகுத்தியவர்.
விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோர் இவரிடம்தான் பணிபுரிந்தனர். அதாவது இருவருக்கும் குரு, சி. ஆர். சுப்பராமன்தான்.
இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்தன. என்ன செய்வதென்று புரியாத நிலை. தவித்தார்.
அப்போது ஒரு ஜோதிடரை சந்தித்தார். அவர், “வாய்ப்பு தேடி நீ எந்த கம்பெனிக்கும் போகாதே.. உன்னை கூட்டிச் செல்ல கார் வரும்.. தொடர்ந்து வாய்ப்புகள் வரும்..” என்றார்.
ஆனால் அடுத்த சில நாட்களில் ஆர். சுப்பராமன் வீட்டுக்கு, தமிழ்நாடு டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கார் வந்தது… இசை அமைக்க வாய்ப்பு வந்தது.
ஆர். சுப்பராமனுக்கு ஆனந்த அதிர்ச்சி.
இதற்கு முன்பாக நடந்தது என்ன தெரியுமா..
தமிழ்நாடு டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கும் படத்துக்கு இசையமைப்பாளர் சின்னையாவைத்தான் புக் செய்து இருந்தனர். அவருக்கு திடீரென உடல் நிலை முடியாமல் போய்விட்டது. அடுத்து ராஜேஸ்வரரை ஒப்பந்தம் செய்தனர். அவர், இரு பாடல்களுக்கு இசைமையைத்த நிலையில் வேறு வேலைகளுக்காக சென்றுவிட்டார். இந்த நிலையில்தான், ஆர். சுப்பராமனை அழைக்க, கார் வந்தது” என்ற தகவைலைச் சொன்னார் சித்ரா லட்சுமணன்.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..