சீனுராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. அதற்கு முன் படங்களில் நடித்திருந்தாலும் இந்த திரைப்படமே திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பிறகு மாமனிதன், தர்மதுரை, இறைவி போன்ற படங்களில் நாயகனாகவும். விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டினார் விஜய் சேதுபதி.
அவரை பற்றி மிஷ்கின் பேட்டி ஒன்றில் |15 ஆண்டுகளுக்கு முன் என் படத்தில் நடிக்க வந்தான். நீ இந்த கதைக்கு சரிவர மாட்டே என்று போ சொல்லிட்டேன். ஆனால் இன்று உலகம் போன்று நடிகராக வளர்ந்து நிற்கிறான். அதை சொல்வதில் பெருமைப்படுகிறேன். நான் உனக்கு சாபம் இடுகிறேன். நீ சீக்கிரம் ஹாலிவுட் திரைப்படத்திற்கு வந்திருவ கண்ணா” என்றார் மிஷ்கின்.