Friday, April 12, 2024

‘மிரள்’ படத்தின் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல தரமான உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தயாரிக்கும் மிகச் சிலரில் ஒருவர் Axess Film Factory நிறுவனத்தின் தயாரிப்பாளரான G.டில்லி பாபு. 

அவரது தயாரிப்பில் வெளியான ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சிலர்’ என பல திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை  பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படங்களாகவும் ஆகின. 

தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு தற்போது ‘மிரள்’ என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் பரத், வாணி போஜன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகையர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

கதை-வசனம்-இயக்கம் – M.சக்திவேல், இசை – எஸ்.என்.பிரசாத், ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா, படத் தொகுப்பு – ஆர்.கலைவாணன், கலை இயக்கம் – மணிகண்டன் சீனிவாசன், சண்டை பயிற்சி இயக்கம் – டேஞ்சர்’ மணி, ஒலி வடிவமைப்பு – சச்சின் சுதாகரன்-ஹரிஹரன் M – Sync Cinema, ADR – கவின் முதல்வன், ஒலிக்கலவை – அரவிந்த் மேனன், ஆடை வடிவமைப்பு – ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன், உடைகள் – M.முகமது சுபையர், ஒப்பனை – வினோத் சுகுமாரன், டி.ஐ. கலரிஸ்ட் – G.S.முத்து, Accel Media, VFX மேற்பார்வை – கிரண் ராகவன் – Resol FX, புகைப்படங்கள் – E.ராஜேந்திரன், பப்ளிசிட்டி டிசைன்  – சந்துரு-தண்டோரா, பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன், தயாரிப்பு மேலாளர் – பாலமுருகன்.

ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் பார்வையாளர்கள் தமிழ் திரையில்  இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்கும்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இந்தப் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

- Advertisement -

Read more

Local News