பல தமிழ் படங்களில் நெகடிவ் ரோல்களில் நடித்து மிரட்டுபவர் மைம் கோபி. விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு வெற்றிபெற்றார். அதில் முதல் பரிசு வென்றவர், அந்தத் தொகையை புற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு அளித்தார்.
அவர், “என் மனைவி ஒரு டாக்டர். அமெரிக்காவில் படித்தவர். ஆனால் நான் என்.ஜி.ஓ. பணிகள் அதிகம் செய்வேன். அதை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி என்னை காதலித்தார்.
எங்கள் காதலுக்கு அவர் வீட்டில் ஒப்புதல் கிடைக்கவில்லை. எதிர்த்து திருமணம் செய்ய விருப்பம் இல்லை. அதனால் 5 வருடம் காத்திருந்து தான் திருமணம் செய்து கொண்டோம்” என்று ஏற்கெனவே பேசியிருந்தார்.
# மைம் கோபி என்று பெயர் பெற்றது எப்படி என்பது உள்ளிட்ட தகவல்களை டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.
அவரது சுவாரஸ்யமான பேட்டியை பார்க்க, கீழக்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..