கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலில் இந்த முயற்சியில் இறங்கியவர் எம்.ஜி.ஆர். என்பதையும், அது முடியாமல் போனது என்பதையும் அறிவோம்.
அந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் நாவலுக்கு திரைக்கதை எழுதியவர் யார் தெரியுமா.. மறைந்த பிரபல இயக்குநர் மகேந்திரன்தான்.
இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
“என்னை திரைத்துறைக்குக் கொண்டு வந்தது எம்.ஜி.ஆர்.தான். அந்த காலகட்டத்தில், ‘பொன்னியின் செல்வன் நாவலுக்கு திரைக்கதை எழுது’ என்றார் நானும் எழுதினேன். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்தப் படத்தை உருவாக்க முடியாமல் போய்விட்டது” என்றார் மகேந்திரன்.