எம் ஜி ஆர் படங்களுக்கு அதிக அளவில் பாடல்களை எழுதியவர் என்றால் அது கண்ணதாசன். நெருங்கிய நண்பர்களும்கூட.
ஆனால் இருவருக்குள்ளும், பிரச்சினைகள் ஏற்பட்டதும் உண்டு.
கண்ணதாசன் முதலில் காமராஜருக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அதன் பின் திமுகவிற்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
அப்பொழுது மேடையில் பேசிய கண்ணதாசன் சில இடத்தில் எம்ஜிஆரை கொஞ்சம் தாறுமாறாக விமர்சித்து பேசி இருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் திமுகவில் தான் இருந்தார். இதனால் கண்ணதாசன் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாத எம்.ஜி.ஆர், தனது படங்களில் கண்ணதாசன் பாடல் எழுத வேண்டாம் என்று முடிவு எடுத்து வாலியை பாடல்களை எழுத வைத்தார்.
பிறகு எம்ஜிஆர் தனி கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் ஆனார். அப்போது அரசவை கவிஞராக வாலியை தான் நியமிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று கண்ணதாசனை நியமித்து விட்டார்.
இதனால் நெகிழ்ச்சியடைந்த கண்ணதாசன், “சாகும்வரை எம்.ஜி.ஆர்.தான் முதல்வர்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
அதுவே நடந்தது.