Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

ஆரூர்தாஸுக்கு ஒரே மாதிரி பரிசு கொடுத்த எம்.ஜி.ஆர். – சிவாஜி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் மறைந்த வசனகர்த்தா ஆரூர்தாஸ்,  50களில் கொடிக்கட்டி பறந்த வசனகர்த்தாக்களில் முக்கியமானவர்.  ஐநூறுக்கும்  அதிகமான படங்களில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார்.

நடிகர்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் படங்களுக்கு அதிகமாக வசனம் எழுதியவர் இவர்தான்.

ஒரு சமயம், இருவர் படத்துக்கும் ஒரே நேரத்தில் இவர் வசனம் எழுத.. இரண்டும் வெற்றிகரமாக  ஓடியது. ஆகவே எம்.ஜி.ஆர். சிவாஜி இருவரும், தனித்தனேயே ஆரூர்தாஸிடம், “உங்களுக்கு என்ன பரிசு” வேண்டும் என கேட்டனர். இருவரிடமும் ஆரூர்தாஸ், “உங்கள் அன்பே போதும்” என்று சொல்லிவிட்டார்.


ஆனால்  இருவரும் சொல்லி வைத்த மாதரி தங்கத்தில் ஆரூர்தாஸ் பெயர் பதிந்த  பதக்கம் அளித்தனர்.

“எப்படி இருவரும், ஒரே மாதிரி பரிசு அளித்தார்கள்” என்று ஆச்சரியம் அடைந்தாராம் ஆரூர் தாஸ்.

- Advertisement -

Read more

Local News