தமிழ்த் திரையுலகின் உச்சத்தில் எம்.ஜி.ஆர். இருந்த காலகட்டம். அவரது படம் என்றாலே திரையரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதும். அவருடன் நடிப்பதற்கு நடிகர்கள் போட்டி போட்டார்கள்.
சரோஜா தேவி, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, தேவிகா, பத்மினி, பானுமதி என அனைத்து முன்னனி நடிகைகளும் ஜோடியாக நடித்தனர்.
ஆனால் ஒரு நடிகை மட்டும் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிக்கவில்லை.
அந்த நடிகை விஜயகுமாரி.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி, “நிஜ வாழ்க்கையில் எம்ஜிஆரும் விஜயகுமாரியும் உடன்பிறந்தவர்கள் போல பழகினார்கள். இதன் காரணமாகவே எம்ஜிஆர் தனக்கு ஜோடியாக விஜயகுமாரி நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
நாடோடி மன்னன் படத்தில் விஜயகுமாரியை நாயகியாக நடிக்க வைக்கலாம் என சிலர் ஆலோசனை கூறியபோதும் எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்” என்று தெரிவித்தார் மணி.