Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

பிக்பாஸில் இந்த வாரம் மதுமிதா வெளியேறினார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ்-5 நிகழ்ச்சியில் இந்த வாரம் மதுமிதா வெளியேறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸின் முதல் பகுதியில் இருந்து வாரா, வாரம் வெளியாகும் நபர்களின் தகவல்கள் மட்டும் அதிகப்படியாக எதிர்பார்க்கப்படும். பிக்பாஸ் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பே இதுவாகத்தான் இருக்கிறது.

ஆனால் தற்போது நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-ம் பாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் வெளியேற்றப்படுபவர் பற்றிய தகவல் சனிக்கிழமை இரவிலேயே தெரிந்துவிடுகிறது.

அந்த வகையில் இந்த வாரம் வெளியேறியவர் யார் என்பது நேற்றைய இரவு படப்பிடிப்பு முடிந்தவுடனேயே வெளியாகிவிட்டது.

இந்த வாரம் ராஜு, அபினய், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி, மதுமிதா ஆகியோர் எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ராஜூ காப்பாற்றப்பட்டார் என்று நேற்றைக்கே கமல் சொல்லிவிட்டார்.

மேலும், ஓட்டெடுப்பில் அபினய் மற்றும் மதுமிதா ஆகிய இருவரும்தான் கடைசி இரண்டு இடங்களை பிடித்திருந்தனர். இதனால் அவர்களில் ஒருவர்தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அபினய் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் எதையுமே செய்யவில்லை.. ஆகையால் அவரை வெளியேற்ற வேண்டும் என்று பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் மதுமிதாதான் நேற்றைய தினம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் ஸ்ருதி வெளியேற்றப்பட்டபோதுகூட அவருக்குப் பதிலாக அபினய்யை வெளியேற்றி இருக்கலாம் என்று கூறினார்கள். இந்நிலையில் இந்த வாரமும் அபினய் காப்பாற்றப்பட்டு, மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News