Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

‘மாஸ்டர்’ படத்தின் காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியானது-கோடம்பாக்கத்தில் பரபரப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘மாஸ்டர்’ படத்தின் ஒரு மணி நேரக் காட்சிகள் இன்று இரவு திடீரென்று வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

200 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் நாளை மறுநாள் பல்வேறு தடைகளைத் தாண்டி திரைக்கு வரவிருக்கிறது.

இந்த நேரத்தில் திடீரென்று இன்று இரவு 9.30 மணியளவில் ‘மாஸ்டர்’ படத்தின் 60 நிமிடக் காட்சிகள் 40 கிளிப்பிங்ஸ்களாக இணையத்தில் பரவத் தொடங்கின.

இதைக் கண்டு அதிர்ச்சியான ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ உடனடியாக டிவிட்டரில் இதனை ஒரு செய்தியாக அறிவித்து. “யாரும் இதனை ஷேர் செய்ய வேண்டாம்…” என்று கேட்டுக் கொண்டார்.

அதேபோல் படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜும் தனது டிவிட்டர் பக்கத்தில், “மாஸ்டர்’ படத்தை உங்களிடம் கொண்டு வருவதற்கு கடந்த ஒன்றரை வருட காலமாக போராடியிருக்கிறோம். திரையரங்குகளில் நீங்கள் ‘மாஸ்டரை’ கண்டு ரசிப்பீர்கள் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். உங்களது கண் பார்வைக்கு ‘மாஸ்டர்’ படத்தின் லீக்கான காட்சிகள் வந்தால், தயவு செய்து அதனை ஷேர் செய்ய வேண்டாம். இன்னும் ஒரு நாள் காத்திருங்கள். ’மாஸ்டர்’ உங்களை வந்து சேரும்..” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் அருண் விஜய் இது குறித்து தனது டிவிட்டர் செய்தியில், “மாஸ்டர்’ படத்தின் லீக் காட்சிகளை தயவு செய்து யாரும் எங்கேயும் ஷேர் செய்ய வேண்டாம். தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்து ரசிப்போம்.. கொண்டாடுவோம்..” என்று கூறியிருக்கிறார்.

உண்மையில் இந்தக் காட்சிகள் எங்கேயிருந்து லீக்காயின என்பதைப் பற்றி தயாரிப்பாளர் தரப்பு தற்போது தீவிரமாக விசாரித்து வருகிறது.

‘மாஸ்டர்’ படம் சமீபத்தில் விநியோகஸ்தர்களுக்காக போடப்பட்டதாம். அந்தக் காட்சியில்தான்  செல்போனில் 1 அல்லது 2 நிமிட காட்சிகளாகப் படமாக்கப்பட்டு தற்போது வெளியில் வந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News