Friday, November 22, 2024

‘மாஸ்டர்’ படம் வசூலை அள்ளுகிறது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு வருட காலத்திற்குப் பிறகு திரைக்கு வந்திருக்கும் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் அவருடைய ரசிகர்களால் கடந்த 3 நாட்களாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா பயத்தினாலும், லாக் டவுனாலும் தியேட்டர்கள் பக்கமே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அந்தப் பயத்தையெல்லாம் மூட்டை கட்டி தூக்கி வைத்துவிட்டு தங்களுடைய அபிமான ஹீரோவை ஆராதிக்க விடியற்காலை 2 மணிக்கெல்லாம் மார்கழி பனியில் தியேட்டருக்கு வந்து குவிந்தார்கள்.

கடந்த 13-ம் தேதியில் இருந்தே ‘மாஸ்டர்’ திரைப்படம் அனைத்து ஊர்களிலும் 5 ஷோக்களாக திரையிடப்பட்டு வருகிறது.

‘மாஸ்டர்’ திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. படம் தமிழகம் முழுவதும் டிஸ்டிரிபியூஷன் முறையில் விநியோகஸ்தர்கள் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.

சென்னைக்கு கற்பக வினாயகர் பிலிம்ஸ் 5.5 கோடி, செங்கல்பட்டு படூர் ரமேஷ் 15 கோடி, வேலூர்-புதுச்சேரி செந்தில் 8.5 கோடி, சேலம் சுப்புராஜ் 6.5 கோடி, கோவை ராஜமன்னார் 11.5 கோடி, திருச்சி அரவின்த் 8.25 கோடி, மதுரை அழகர்சாமி 9 கோடி, திருநெல்வேலி 5 கோடி என்று தமிழகத்தின் அனைத்து விநியோகப் பகுதிகளின் மொத்த விற்பனையும் 84 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

மேலும் கேரளாவில் 6.5 கோடிக்கும், கர்நாடகாவில் 8.25 கோடிக்கும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 9 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. இது தவிர கொரோனா லாக்டவுன் இல்லாத வெளிநாடுகளிலும் வெளியாகியுள்ளது. அனைத்து வெளிநாட்டு உரிமைகளும் சேர்ந்து 30 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

படம் வெளியான முதல் நாளிலேயே 26 கோடியை வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது. அடுத்த நாளான பொங்கல் தினத்தன்று மட்டுமே உலகம் தழுவிய வசூல் அளவில் 35 கோடி நிகர லாபமாக கிடைத்தாகவும் சொல்கிறார்கள்.

கடந்த 3 நாட்களில் தமிழகத்தில் 61 கோடியும், கேரளாவில் 4.80 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 6.25 கோடியும், கர்நாடகாவில் 4.50 கோடி்யும் கிடைத்திருக்கிறதாம்.

இதே நேரம் ‘மாஸ்டர்’ படம் வட இந்தியாவில் வெளியான இந்தி பதிப்பில் மட்டும் படு தோல்வியைச் சந்தித்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. ஹிந்தி பதிப்பின் மூலமாக 80 லட்சம் ரூபாயும்தான் கடந்த 3 நாட்களின் முடிவில் வசூலாகக் கிடைத்திருக்கிறதாம்.

நாளை ஞாயிற்றுக்கிழமைவரையிலும் தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாகும் சூழலே இருப்பதால் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் ஓவர் டிராப்ட்டாகவே இந்தப் படத்தின் வசூல் அமைய வாய்ப்புண்டு என்கிறது சினிமா வட்டாராம்.

- Advertisement -

Read more

Local News